இது ஹிந்து தேசம், 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
...இன்று பகவான் #ரமண_மகரிஷி பிறந்த தினம்(டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) ..அவரது வாழ்க்கை வரலாறு உங்களுக்காக.....
அருப்புக்கோட்டை நகரின் அருகிலுள்ள திருச்சுழியில் 1879-ம் ஆண்டு பகவான் ரமணர் பிறந்தார்.

ரமணரின் சிறு வயதிலேயே தந்தை சுந்தரம் ஐயர் காலமானார், தாயார் அழகம்மை
அரவணைப்பில் வளர்ந்த ரமணர் பள்ளி வயதுவரை சராசரி மாணவராகவே இருந்தார்.
விளையாட்டும் நீச்சலுமே அவரது பொழுதுபோக்கு.
தனது 16-ம் வயதில் 1895-ல் அவரின் வீட்டிற்கு வந்த விருந்தினர் “அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்று சொன்ன வார்த்தை அவரைப் பரவசப்படுத்தியது.
திருவண்ணாமலைதான் அருணாசலம் என்பதை அவர்மூலம் உணர்ந்தார்.
அதுமுதல் அவரது உள்ளத்தில் ஒரு புதிய கிளர்ச்சி ஏற்பட்டது.
பின்பு ஒரு சமயம் மரண பயம் அவரை ஆட்கொண்டது. அந்த அனுபவத்தைத் தானே உணர ஒரு பிணம்போலப் படுத்தார், அவருள் ஏற்பட்ட உள்ளுணர்வு அவருக்கு இறப்பின் ரகசியத்தையும் இறப்பிற்குப் பின் என்ன என்பதையும் விளக்கியது.
“அழிவற்று அண்டமெங்கும் நிறைந்திருக்கும் ஆன்மஜோதியோடு ஒன்றியவன் நான்” என்ற அறிவு புலப்பட்டது.
1896, ஆகஸ்ட் 29-ல் இவரது ஞானத்தின் வாசலைத் திறந்தது.
அண்ணனுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அண்ணாமலைக்குப் புறப்பட்டார்.
“நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவரது உத்தரவுப்படி கிளம்புகிறேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. இதற்காக ஒருவரும் விசனப்பட வேண்டாம். ‘இதை'த்தேடி காசு, பணம் செலவு செய்ய வேண்டாம்...” என்று எழுதி கீழே தனது பெயரைக் குறிப்பிடாமல் கோடு போட்டுவைத்தார்.
‘தகப்பனார்' என ஈசனையும், ‘இது' என அஃறிணையில் தன்னையும் குறிப்பிட்டார்.
ஆணவம் அழிந்த ஆத்மாவாக வெளிப்பட்டு, தான் ஞானம் அடைந்துவிட்டதை உணர்த்தினார்.
1896 செப்டம்பர் முதல் நாள் ரமணரின் அருள்பாதம் அண்ணாமலை என்னும், அருணாசலத்தில் அடி வைத்தது.
நேராகக் கோவிலுக்குள் நடந்தார். “அப்பா, நான் வந்துவிட்டேன்” என்றுகூறி அண்ணாமலையார் முன் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அவரது பிரயாணம் அன்றோடு நிறைவுபெற்றது. அதற்குப்பிறகு தன் ஸ்தூல சரீரத்துடன் வேறு எங்குமே சென்றதில்லை.
ரமணரின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது.
ரமண பகவானின் ‘நான் யார்' என்ற தன்னையறியும் தத்துவ விளக்கம் அனைவரையும் கவர்ந்தது.
‘‘நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஒடுங்கும், அதுவே தவம்!” என்பது போன்று விளக்கங்கள் அருளினார்.
ரமண மகரிஷி காலத்தில் அவரைக் கண்டோர் அடைந்த ஆனந்தத்திற்கும், துன்பங்கள் நீங்கி அமைதியடைந்த மக்களின் சுகத்திற்கும் அளவில்லை.
ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. பயன் அடைந்தோர் அவரிடம் நன்றி கூறினாலும் அதை அவர் ஏற்பதில்லை.
மௌனமே அவரது ஆசீர்வாதம். மௌனமே அவரது பேச்சு. அதில் நாம் மூழ்க மனமோ சுகமாகும்.
பகவான் ரமணர் தனது தாயாரின் மறைவின்போது அவரின் தலையிலும் மார்பிலும் தனது இரு கைகளையும் வைத்து முக்தி அடையச்செய்தார்.
அது மட்டுமல்ல, தாயாரின் சமாதியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து கோவிலும் கட்டினார், அதை தியான பூமியாக்கினார். ஒவ்வொரு நாளும் பலரும் அங்கமர்ந்து அன்பின் அருளொளியைப் பெறுகின்றனர்.
ரமணரை இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சியர்கள் என பல்வேறு மதத்தவரும் சென்று வழிபடுகின்றனர்.
ஞானி என்பவன் எவரும் எளிதில் அணுக முடியாதவன் என்ற நிலையை மாற்றி அனைவரும் தன்னை அணுகும்படி வாழ்ந்தார்.
ஆத்ம விசாரணை செய்யும்முறையை தெளிவுபடுத்தினார்.
ஒருநாள் மகான் ரமணர் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக வந்தார்.
இருவரும் உரையாடுகிறார்கள். அந்த உரையாடல்.
நீங்கள் கடவுளைப் பார்திருக்கிறீர்களா?
ரமணர்: அதை ஏன் அறிய விரும்புகிறீர்கள்?
நீங்கள் கடவுளைப் பார்த்திருந்தால் நானும் அவரைக்காண தங்களிடம் உதவியை வேண்டுகிறேன்.
ரமணர்: நான் கடவுளைக் காண விரும்புகிறேன் என்கிறீர்கள்; முதலில் நீங்கள் யார்?
என் பெயர் தேவதத்த சர்மா
ரமணர்: இது உங்கள் பெயர்? நீங்கள் யார்?
நான் சர்மா என்று முன்னரே சொல்லிவிட்டேன். நான் ஒர் அந்தணர்.
ரமணர்: அது உங்கள் வேலை. நீங்கள் யார்?
நான் யார் என்று என்னால் சொல்ல இயலவில்லை.
ரமணர்: "நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியாத போது கடவுளை எவ்வாறு தெரிந்து கொள்வீர்கள்? கடவுளை அறிய வேண்டுமானால் முதலில் நீங்கள் யார் என்று அறிய வேண்டும் "
என்றார்
கிரிவலத்தினால அடையும் நன்மை என்ன எனக் கேட்ட பக்தருக்கு, “கிரிவலம் தீயைப் போன்றது. தன்னைத் தொட்டவரைத் தீ சுடுவதுபோல அது உன்னை ஈர்க்கும். நம்பிக்கை உண்டோ இல்லையோ, ஒருமுறை கிரிப்பிரதட்சணம் செய்துபார்; நீயே உணர்வாய்” என்றார். ரமணரின் இந்த கூற்றுக்குப் பிறகே கிரிவலம் பிரபலமானது.
பவுர்ணமியில் இன்று லட்சக்கணக்கானோர் வலம் வருகின்றனர். ‘உன்னை விசாரித்து அறி' என்பது அவரது சுருதி வாக்கியம்.
இருபதாம் நூற்றாண்டு மக்களுக்குத் தேவையான ஆன்மிகத்தை எளிமையாக உணரவைத்த ஞானி தனது ஸ்தூல உடலைவிட்டு ஜோதியாகி 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் இரவில் அருணைமலையில் கலந்தார்.
அந்த ஜோதியை பல்லாயிரக்கணக்கானோர் அதே இரவு வானில் கண்டதாகக் கூறினர்.
ரமணர் பெரிய பிரசங்கம் நிகழ்த்தியதில்லை.
தனக்கென சீடர் பட்டாளம் உருவாக்கவில்லை.
அவர் போதனை எல்லாம் அன்பான அருளுரையே!
#உபதேசங்கள்
ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம்.
ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம்.
உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.
இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
(ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' நூலை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.)
ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது.
தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும்.
அதனைப் பயில்க.
தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.
#சகஜ_சமாதி
ஒருவன் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்கிறான்.
அப்போது அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது.
மாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
பல இடங்களைக் கடந்து செல்கின்றன. வழியிலே சோலைகளும் ஊர்களும் இருக்கின்றன.
அவற்றின் வழியே வண்டி செல்கிறது. வண்டி செல்வதனால் அதற்கும் தூங்கும் மனிதனும் அந்த வழியிலே சென்றவன் ஆகிறான்.
வண்டி ஓரிடத்தில் நிற்கிறது.
சிறிது நேரம் கழித்து வண்டியில் இருப்பவன் விழித்துக்கொள்கிறான்.
அதற்கு முன் அவன் கடந்த வழி அவனுக்குத் தெரியாது.
அங்கிருந்த காட்சிகளையும் அவன் அறியான்.
ஆனாலும் அவன் அத்தனைக் காட்சிகளையும் கடந்தே வந்திருக்கிறான்.
சகஜ சமாதியில் இருக்கும் ஆத்ம ஞானி உலகில் வாழ்ந்தாலும் அதில் ஈடுபடாமல் அதனால் வேறுபாடு அடையாமல் இருக்கிறான்.
இதுபோன்ற பல உபதேசங்களை வழங்கியவர் ரமண மகரிஷி.
திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து வேறெங்கும் செல்லாமல் மக்களைத் தான் இருக்கும் இடத்திற்கு தன் தெய்வீக ஒளியால் வரவழைத்து தன் பக்தர்களாக்கிய பெருமை ரமண மகரிஷிக்கே உரியதாகும்.
நம்முடைய தலைமுறைக் காலத்திலேயே ஒரு சாதாரண மனிதராக அவதரித்து, பின்பு தன் முயற்சியாலும், பூர்வஜென்ம பலத்தாலும் தெய்வ நிலைய அடைந்தவர்.
அமைதியையும் ஆனந்தத்தையும் பரிபூரணமாக உணர்ந்தவர். தான் தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டதை வெளிப்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கு அருளுபதேசமும் நயன தீட்சையும் வழங்கிய ஞான வள்ளல் ரமணர்.
"எவர் முன்னிலையில் பரிபூரண அமைதி கிடைக்கிறதோ அவரே உன் குருவாவார்"
என்று கூறிய ரமணரின் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.
உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான்.
இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!...
[புகைப்படங்கள்;1,2,5-பகவான் ரமணர்,
3 தாயாருடன்,4 ரமணர் புகழை வெளிநாடுகளில் பரப்பிய பால் பிரண்டன்,6 ரமணர் சமாதி]