ஞாயிறு, 19 அக்டோபர், 2014

எபிடஸ் என்ற கிரேக்க அறிஞர் சூழ்நிலைகள் மனிதர்களை உருவாக்குவது அல்ல. மாறாக தான் யார், எவ்வாறு நிகழ்வுகளை எதிர்கொள்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் காரணியே என்று கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான சூழ்நிலைகளில் பல்வேறு வகையான நிகழ்வுகளை சந்திக்கின்றோம். சாதாரணமான நிகழ்வுகளை எளிதானவை என்று சொல்லி எதிர்கொள்கின்றோம். சிக்கலான நெருக்கடியான நிகழ்வுகளை எதிர்கொள்ள பெரிதும் அஞ்சுகின்றோம்.
ஆனால் அது போன்ற சிக்கலான, நெருக்கடியான நிகழ்வுகளை எதிர்கொள்ளுவது எப்படி என்பதை பற்றி பிரையின் டிரேசி என்பவர் தன்னுடைய நான்காவது புத்தகத்தில் எடுத்து கூறுகிறார். Focal point, Eat That Frog and Create Your Own Future உள்ளிட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
வாழ்விலும், வியாபாரத்திலும் திட்டமிட்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்கின்றன. எந்த அளவு கீழே விழுவோம் என்பதை விட எந்த அளவு விரைவாக மேலே எழுவோம் என்பது தான் முக்கியம். நெருக்கடியான நேரங்களில் வெற்றிபெறுவது எப்படி என்பதை எடுத்துரைக்கும் இந்தப் புத்தகம், நடைமுறை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது பற்றி வேகமாகவும், முடிவாகவும், முழுமையாகவும் தெரிவிக்கிறது.
ஆர்னால்ட் டாயின்பி என்ற வரலாற்று ஆசிரியர் 3000 ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து கூறியுள்ளார். அந்த கூற்றுகள் ஒவ்வொரு தனிநபரின் வாழ்விலும் ஏற்புடையதாகும். வியாபாரத்திலும் இது போன்றே எதிர்பாராத மாற்றங்களும், ஆக்கிரமிப்புகளும் நிகழ்கின்றன. இது போன்ற நேரங்களில் தலைவர்களாக இருப்பவர்கள் சரியான முடிவு மற்றும் நடவடிக்கை இவற்றின் மூலமாக எதிரிகளை வென்று தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதற்கு மங்கோலிய சாம்ராஜ்யம் சரியான எடுத்துக்காட்டாகும். விடாமுயற்சியை போல வெற்றிக்கு வித்திடும் குணாதிசயம் வேறு ஏதும் இல்லை, விடாமுயற்சி தன்னம்பிக்கையை வளர்க்கும், தன்னம்பிக்கை இலக்கை அடைய வழிகாட்டும்.
உணர்வுகளை கட்டுப்படுத்தி சரியான கேள்விகள் கேட்பதன் மூலம் தீர்வுகள் காண வேண்டுமே தவிர உணர்வு பூர்வமாக ஒரு தீர்வை அடைய முடியும் என நம்புவர்கள் கானல் நீரை அடைய முயற்சிப்பதற்கு சமமாகும் என்கிறார்.
ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு மோசமான முடிவும் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளை ஏற்றுக் கொண்டு அவை நிகழாவண்ணம் செயல்படவேண்டும். வெற்றியும் தோல்வியும் தொடர்ச்சியாக நிகழ்வன அல்ல. மாறி மாறி நடக்கும்போது வேறு வேறு விளைவுகள் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
நடந்ததை எண்ணி அவைகளை மேற்கோள் காட்டி பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.நூறு விழுக்காடு எந்த ஒரு பிரச்சினையையும் எதிர்கொண்டு அடுத்தவரை குறை கூறாமல் நிகழ்வுகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
‘கவிழ்ந்த பால் கலயம் ஏறாது’, ‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ என்ற மனப்பான்மை இருந்தால், எந்த சூழலிலும் நமக்கு தேவை இல்லை என்றால் விட்டு விலகுதலே சரியாகும்.
நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது ஒரே ஒரு வழிதான் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும் அந்த பிரச்சினைக்கு எந்த அளவு விதவிதமான வித்தியாசமான தீர்வுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் நன்று. ஏனென்றால் எந்த ஒரு இடத்துக்கும் நிச்சயமாக மாற்று வழி இருந்தே ஆக வேண்டும்.
பரேடோ என்ற இத்தாலிய பொருளாதார விஞ்ஞானி 80 சதவிகித செல்வம், 20 சதவிகிதம் மனிதர்களிடம் இருப்பதாக ஒரு கருதுகோளை நிறுவினார். இந்த கருதுகோள் பலவகைகளிலும் 80:20 என்ற பாணியில் கையாளப்பட்டது. அதை போலவே 80 விழுக்காடு செயல்கள் 20 விழுக்காடு நடவடிக்கையில் இருந்து வரும் என்று சிலர் விளக்கினார்கள்.
நம்மில் சிலர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக, அதை இடியாப்ப சிக்கலாக்குவதில் மிக தீவிரமாக இருப்பார்கள். பிரச்சினைகளுக்கு சாதாரண தீர்வுகள் உண்டு. ஆனால் சாதாரண தீர்வுகள் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தீர்க்க உதவாது. இந்த எண்ணத்தில் பிரச்சினைகளை சிக்கலாக்குபவர்களே அதிகம். எனவே எந்த பிரச்சினையையும் அளவுக்கு அதிகமான கற்பனை செய்து அதனால் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பது இன்றியமையாதது ஆகும்.
உள்மனதின் கருத்துகள் பெரும்பான்மையான நேரங்களில் கேட்கப்படுவதில்லை. மாறாக ஆழ் மனதில் தோன்றும் சிறிய கருத்து செறிவையும் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் கருத்துச் செறிவுகள் நெருக்கடிகளை நேர்காண உற்ற துணையாக இருந்து உதவும்.
ஆண்டவர் நல்லவர்களை மட்டுமே அதிகம் சோதிப்பார் என்று அக்கம் பக்கத்தில் பேசும் செய்தியை நாம் புறம் தள்ளுகின்றோம். ஆனால் அதில் உள்ள கருத்து ஒழுக்கமும், சிறந்த குணமும் எதையும் எதிர்கொள்ள உதவும் என்பதே ஆகும். எனவே, ஒழுக்கமும், சிறந்த குணமும் நெருக்கடி நேரங்களில் அவற்றை அதிரடியாக தீர்க்க உதவுகின்றன.
வெல்லும்வரை விடக்கூடாது என்ற மனப்பாங்கு வெகுவானவர்களிடம் இருப்பதில்லை. இன்னும் சிறிது தூரம் மேலே ஏறி இருந்தால் பள்ளத்தில் இருந்து நிலப்பரப்புக்கு வந்து விடலாம். ஆனால், அந்த கடைசி நான்கு அல்லது ஐந்து அடி உயரம் ஏறுவதில் மனம் தளரும்போது நிலப்பரப்பை அடைவது கனவாக முடிகிறது. ஆக வெல்லும் வரை விடக்கூடாது என்பது நெருக்கடிப் பணியை உருகச் செய்யும் மனப்பாங்காகும்.
பலம் மற்றும் பலவீனம் என்பது இரு கூறுகளாக மனிதர்களை பிரிக்கின்றது. பலம் என்பது ஒருவர் விடாப்பிடியாய் ஒரு கருத்தை ஏற்பது. பலவீனம் என்பது ஒரு கருத்தை தயக்கத்துடனும், தடுமாற்றத்துடனும், அற்ப காரணங்களுக்காகவும் தவிர்த்து பிரச்சினைகளில் மூழ்கிவிடுதல் ஆகும்.
எதை, எப்பொழுது, எங்கே, எவ்வாறு சரியாக செய்வது என்பதில் தான் வெற்றியின் சூட்சமம் அடங்கி உள்ளது. அவ்வாறு செய்பவர்கள் நெருக்கடிகளை நேர்கொண்டு பஞ்சாக ஊதிவிடுவார்கள்.
முயற்சி இல்லாத லாபம், பயம் இல்லாத அனுபவம், வெகுமதி இல்லாத வேலை இவை அனைத்தும் பிறக்காமலே வாழ்வதற்கு ஒப்பாகும். இது மிகைப்படுத்தபட்ட கூற்று அல்ல.
மேலே கூறிய இந்த கருத்துகளை பிரையின் டிரேசி, ஒருவர் எவ்வாறு நெருக்கடிகளை நேர்கொண்டு, பிரச்சி னைகளை எதிர்கொண்டு தொடர்ந்து போராடி அவைகளை கட்டுக்குள் கொண்டுவருவது என்பதை பற்றி விளக்கமாக கூறியுள்ளார். இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள் ஏதோ நாம் பேருந்திலோ அல்லது தொடர் வண்டியிலோ பயணிக்கும் சக பிரயாணியை பார்ப்பது போல அமைந்துள்ளது. இந்த புத்தகத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். நம்பினோர் நெருக்கடி தீர்ப்பார், நம்பாதவர் நெருக்கடியில் நீச்சலடிப்பர்.
இந்த புத்தகத்தை படிக்க நினைப்பவர்கள் நெருக்கடிகளை நேர்கொள்ளலாம். படிக்காதவர்கள் நெருக்கடிகளோடு வாழலாம். மேலதி கமான கருத்துக்களை சாதாரணமாக நடைபெறும் விஷயங்களை போல எளிதாக எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு.
rvenkatapathy@rediffmail.com

புதன், 27 ஆகஸ்ட், 2014

நவக்கிரகங்களும் உயிர்கள் வளர்ச்சியும்;ஜோதிடம்


சூரியன் சந்திரன் இல்லாவிட்டால் உலகில் மனித வர்க்கமே தோன்றி இருக்காது..மற்ற எந்த ஜீவராசிகளும்,தாவரங்களும் தோன்றி இருக்கவும் நியாயமில்லை.சூரிய
சந்திரனால் எல்லாம் உயிர் பெற்று வளர்கின்றன..வாழ்கின்றன..இவ்விரண்டு கோள்கள் போல மற்ற கிரகங்களும் தனக்கென தனித்தன்மை பெற்றிருக்கின்றன...இக்கோள்களின் மொத்த ஒளிக்கதிர்கள் ஒன்றாக சேர்ந்து பூமியில் விழும்போது மனிதனின் குணங்களில் ,ஜீவராசிகளின் குணங்களில் வாழ்க்கை முறையில் நிறைய மாறுதல்கள் உண்டாகின்றன...மனிதன் வாழ பலவித தேவைகள் பூர்த்தியாகின்றன...

பூமிக்கு ஆக்ர்ஷ்ண சக்தி இருப்பதால் சுமார் இரண்டு கிலோ மீட்டர்களுக்குண்டான எதையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும்.இந்த சக்தி மற்ற எந்த கோளுக்கும் இல்லை..இதனால்தான் பூமியை தவிர எங்கும் ஜீவராசிகள் வாழ வாய்ப்பில்லை என அக்கால நம் முனிவர்களும் ,சித்தர்களும் சொல்லிவிட்டு சென்றனர்.இக்கால விஞ்ஞானிகளும் அது உண்மை என ஒப்புக்கொள்கின்றனர்.

 மனித உடல் வளர்ச்சியில் தலை முதல் மார்பு வரையிலுள்ள மேல் பகுதியை கிரக மண்டலத்தின் இளவரசனான சூரியன் வளர்க்கிறான் என்கிறது ஜோதிடம்.அதுபோலவே சந்திரன் முகத்தையும் ,செவ்வய் மார்பையும் ,புதன் இடையையும் முதுகையும்,வயிற்றை குருவும்,கைகளை ராகுவும் கால்களை கேதுவும் வளர்க்கின்றனர் என ஜோதிடம் சொல்கிறது.ஜாதகத்தில் எந்த கிரகம் வலு குன்றி இருக்கிறதோ அதர்குறிய உடல் பாகங்கள் அழகில்லாமலோ ,வளர்ச்சி இல்லாமலோ,பாதிக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது!!

புதன், 6 ஆகஸ்ட், 2014

                         வல்லரசை நோக்கி இந்தியா

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.  இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

74.3 சதவீதம்

அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர்.  இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இது 3 மடங்கு அதிகமாகும்.  அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனநல பாதிப்பு
இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.  இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர்.  அவர்களிடம், மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன.  இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது.  அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.

இளம் வயதில் குடிக்க தொடங்குவதால் வாழ்நாளில் அது தொடர்பான காயங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இந்த முடிவுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வு குறித்து அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான கலாசாரம்
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது.  குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மதுபான நுகர்வு ம்ற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது.  மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் தெரியுமா?






ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்றவற்றிற்கு நல்லது மற்றும் கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் ருத்ராட்சம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் மகத்துவம்:

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும்.

ஒரு முக ருத்ராட்சத்தின் மகத்துவம்:


ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.

மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும், கோபத்தீயும் விலகும்.

எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.

பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும், பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

                                                                     உலகம் 
ஏ.கே.கான் 1939ம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 1945ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி முடிவுக்கு வந்த நேரம், உலக நாடுகள் பலவும் போரால் சின்னாபின்னாவாகி அவற்றின் பொருளாதார நிலைமை சிதிலமடைந்து போன நிலை.. உலகமே கூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கியதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும் போரால் சேதமடைந்த கட்டமைப்பை மீண்டும் உருவாக்கவும் 1945ம் ஆண்டு டிசம்பரில் உருவாக்கியது தான் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியம் எனப்படும் International Monetary Fund அமைப்பும். 188 உலக நாடுகள் இணைந்து அவரவர் சக்திக்கு ஏற்ப பணத்தைப் போட்டு உருவாக்கியது தான் இந்த வங்கி. ஆனால், இந்த வங்கிக்கு இதுவரை 12 தலைவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே அமெரிக்கர்கள் தான். வங்கியின் தலைமையகம் இருப்பதும் வாஷிங்டனில். ஆரம்பத்தில் உலக வங்கி முழுக்க முழுக்க ஐரோப்பிய நாடுகளுக்கே நிதியுதவி அளித்து வந்தது. பின்னர் ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் ரஷ்யா தனது ஆதிக்கத்தை பரப்ப முயல, ஐரோப்பிய நாடுகளுடன் ஒன்றிணைந்து அமெரிக்கா European Recovery Program என்ற ஒரு புதிய உதவித் திட்டத்தை தொடங்கியது. Marshall Plan என அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்காவே நேரடியாக நிதியுதவி வழங்க ஆரம்பித்தது. 

இதையடுத்து தங்களது ஐரோப்பிய கஸ்டமர்கள் அனைவரும் காலியான நிலையில் தான் உலக வங்கி, ஐரோப்பா அல்லாத பிற நாடுகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. இது தான் உலக வங்கியின் 'பழைய வரலாறு'. மேலும் உலக வங்கியிடம் முதன்முதலில் கடன் கேட்டவை பிரான்ஸ், போலந்து, சிலி ஆகிய நாடுகள் தான். இதில் பிரான்சுக்கே முதலில் கடன் தருவோம் என்றார் அப்போதைய உலக வங்கித் தலைவரான அமெரிக்கர் ஜான் மெக்லாய். அத்தோடு அமெரிக்க மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தது. கடன் வேண்டுமென்றால் பிரான்ஸ் அரசில் உள்ள கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் என்றது. இதற்கு பிரான்ஸ் ஒப்புக் கொண்டதோடு கம்யூனிஸ்ட்டுகளை கழற்றிவிட்டுவிட்டு கடனை வாங்கிக் கொண்டு போனது. இது தான் உலக வங்கியின் 'அரசியல் வரலாறு'. அதே போல இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச அளவில் நாடுகளின் நிதி செலுத்தும் முறைகளை (International payment system) சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் சர்வதேச நாணய நிதியம். பெரும்பாலும் ஏற்றுமதி- இறக்குமதியில் அமெரிக்க டாலர்களே புழக்கத்தில் உள்ளதால், டாலர் புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவே இதை இன்னும் பல சோஷலிஸ நாடுகள் பார்க்கின்றன. இதன் தலைமையகமும் வாஷிங்டனில் தான். உலக வங்கியின் தலைவர்களாக அமெரிக்கர்களே இருந்து வருவது போல இந்த அமைப்பின் தலைவர்களாக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர்

இந்த அமைப்பு சர்வதேச வர்த்தகம், நாடுகளின் டாலர்கள் கையிருப்பு ஆகிய விஷயங்களில் உதவுவதோடு டாலர் பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகளுக்கு தங்களது இறக்குமதிக்காக கடன் கொடுத்தும் உதவுகிறது. ஆனால், இங்கேயும் கம்யூனிஸ்டுகளை அடக்குகிறோம் என்று கியூபாவை விரட்டிவிட்டனர். அதே போல சீனாவின் இடத்தை தைவானுக்குத் தந்தனர். ஆனால், சீனா கடும் சண்டை போட்ட பின்னரே மீண்டும் இடம் கிடைத்தது. இவ்வாறாக உலக வங்கியிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் 188 நாடுகள் இடம் பெற்றிருந்தாலும், இந்த அமைப்புகளின் பெயரில் தான் 'உலகம்', 'சர்வதேச' ஆகிய வார்த்தைகள் உள்ளனவே தவிர, உண்மையில் இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நலன்களையே மையமாகக் கொண்டு செயல்படுவதாக புகார்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகள் இந்த அமைப்புகளின் நிதியுதவியை சார்ந்தே இருந்ததால், உலகளவில் அமெரிக்க, ஐரோப்பிய ஆதிக்கம் தடையில்லாமல் பரவியது.
ஆனால், எப்போது சீனாவும், இந்தியாவும், உடைந்து போன சோவியத் யூனியனின் ரஷ்யாவும், பிரேசிலும் தங்களது பொருளாதார சீர்திருத்தங்களில் இறங்கி free economy, market economy என்ற பேண்ட், சட்டையைப் போட்டுக் கொண்டனவோ, அப்போதே அவற்றின் அடிப்படை பொருளாதார நிலைமைகள் மாறிவிட்டன. இப்போது இந்த நாடுகளில் சந்தைகளில் அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி 'சப்ளை- டிமாண்ட்' தான் ராஜா. காசைப் போடு, தயாரிச்சுக்கோ, வித்துக்கோ, காசு இருந்தா வாங்கிக்கோ, டிமாண்ட் ஜாஸ்தியா இருந்தா விலையைக் கூட்டிக்கோ, நாங்க (அரசு) எதுவும் கேட்க மாட்டோம். இது தான் மார்க்கெட் எக்கானமி. இந்த வகையான பொருளாதாரத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் அமெரிக்கா ஆகியவை இறங்கி தங்களை பொருளாதாரரீதியில் ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டன. ''ஐயா, துரை, எஜமானே, எங்க மக்களுக்கு சாப்பாடு போட கோதுமை இறக்குமதி செய்யக் கூட காசு இல்லை'' என்று உலக வங்கியிடம் கடனும், சர்வதேச நாணய நிதியத்திடம் டாலரும் கேட்ட இந்தியாவின் நிலைமை எல்லாம் மலையேறிவிட்டது. ''நாட்ல கார்கள் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு, பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யவும் மக்களுக்கு தங்கம் இறக்குமதி செய்யவுமே எல்லா டாலரும் செலவாயிருது'' என்று 'சலிப்பு' எக்கானமி நிலைக்கு வந்துவிட்டது இந்தி

புதன், 5 பிப்ரவரி, 2014

nanbarkalin karuthukal varaverkappdukiradu nanndri
பாரதியார் கவிதைகள்
முண்டாசுப் பாட்டனின் மீசை முறுக்கினில்
முத்தமிழ் வித்தகம் முளைத்தது அழகாக
கொண்டாட்டம் போட்டிடும் கொஞ்சு தமிழுமே
கொள்கை பிடிப்புடன் கொண்டது அழகாக
சண்டாளச் சகதியாம் சாதி பேதங்களை
சாடியடித்தான் தமிழ் சாட்டையிலழகாக
திண்டாமைப் பேய்தனைத் தீய்த்து தகித்திடும்
தீந்தமிழ் தந்தான் தெய்வத்தின் குரலாக



உங்கள் பதிவு இந்த வலைத்தளத்தில் பதிவிட அனுபவேன்டிய முகவரி thiandrus.007@gmail.com
ஒரு ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார்.
அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர்.
இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார்.
"கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..." என்று அந்தச் முனிவர் கூறினார்.
மன்னார்சாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.
"பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?'' கடவுள் கேட்டார்.
""தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார், அதான்...'' என்றார் மன்னார்சாமி.
""என்ன வரம் வேண்டும், கேள்...'' என்றார் கடவுள்.
"அதான் கேட்டேனே வரம்... அதை கொடு...'' என்றார் மன்னார்சாமி.
இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்....! அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும்.
என்ன செய்யலாம்......!? - கடவுள் யோசித்தார்.
"பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன்... பெற்றுக் கொள்... போ!''
"அய்...யய்ய....யோ... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே!''
"அதான்...'' என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! - எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்
நன்றி ; தமிழ் அறிவுக்கதைகள்
தன்னம்பிக்கை கதைகள்

திங்கள், 27 ஜனவரி, 2014

மெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன ?

hasselbladh5d
MP அதாவது Mega Pixels மெகா ஃபிக்ஸில்ஸ் என்ற வார்த்தையை தற்காலத்தில் அடிக்கடி கேட்டு வருகிறோம். முக்கியமாக  டிஜிட்டல் கேமேரா  வரவால் இவ்வார்த்தை சாமானியனிர்களிடமும் மிகவும் பிரபலமாகிவிட்டது.
MP அதாவது Mega Pixels (மெகா ஃபிக்ஸில்ஸ் ) என்றால் என்ன ? 
ஒரு பிக்சல் என்பது  கணினி மானிட்டர் அல்லது  (டிஜிட்டல் ஸ்க்ரீனில்) காட்சித்திரையில் தெரியும்  காட்சியில்  ஒரு சிறிய சதுர  புள்ளி ஆகும். இவ்வகை திரைகளை ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் அப்புள்ளிகளை நாம் எளிதாக காணலாம். ஸ்க்ரீனில் புள்ளிகள் அதிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தால்  காட்சி அல்லது படம் மிக தெளிவாக தெரியும்.
images
Image courtesy: ccideas.com
இதை நாம் உபயோகிக்கும் செல் போன்களில் தெளிவாக பார்க்கலாம். அதாவது விலை குறைந்த செல்போன் ஸ்க்ரீனில் இந்த கட்டங்கள்  சாதாரண கண்களுக்கே தெளிவாக தெரியும். அதே வேளையில் மிக விலை உயர்ந்த போன்களின் டிஸ்ப்ளேக்களில் இந்த புள்ளிகள் சாதாரண் கண்களுக்கு புலப்படாது. ஆனால் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை வைத்து பார்த்தீர்களானால் பிக்சல் எனப்படும் புள்ளிகளை காணலாம். அதாவது ஃபிக்ஸில் எனப்படும் அப்புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க காட்சி அல்லது படம் பளிச்சென்றும் அதிக கவர்ச்சியுடனும் தெரிய ஆரம்பிக்கிறது.
nokia-1650-basic-mobile-phone20100630114434!Sony_Ericsson_W995
எனவே நாம் வாங்கும் டிஜிட்டல் கேமராக்களில் ஃபிக்ஸில்கள் அதிகமாக இருப்பின் படங்கள் தெளிவாக இருக்கும். (ஆனால் படத்தின் தரத்தை நிர்ணயம் செய்வதில் இதை மட்டுமே கணக்கில் கொள்ள இயலாது இதோடு சேர்ந்து பிற டெக்னிகல் விஷயங்களும் சேர்ந்துதான் கேமராவின் தரத்தை நிர்ணயிக்கும். எனவே மெகா ஃபிக்ஸில் அதிகம் இருந்தால் அது சிறந்த கேமரா என்று உடனே முடிவு செய்து விட வேண்டாம்.)
ஒரு மில்லியன்  ஃபிக்ஸில்கள்  ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது.  உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில்  2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது.
தொழில் நுட்பம் வளர வளர அதிக மெகா ஃபிக்ஸில்கள் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சாதாரண பயன்பாட்டிற்க்காக  அதிகபட்சமாக 120 MP கேமரா மார்க்கட்டில் கிடைக்கிறது.  இதன் விலை சுமார் 37,000 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 570 மெகா ஃபிக்ஸில் கொண்ட   Fermilab’s digital camera தான் உலகின் மிக அதிக அளவு மெகா ஃபிக்ஸில் கேமராவாகும்.
8477675926_9a55b1d5cb
500x_st_darkenergy_camera_f
570 மெகா ஃபிக்ஸில்ஸ் கேமரா

வெள்ளி, 24 ஜனவரி, 2014

எப்படியலம்  யோசிக்கரங்கபா 

நீங்கள் அதிகம் நாவல் கதை கவிதை எழுதுபவரா.. அப்படின்னா இதைப் படியுங்க..!

கிரியேற்றிவிற்றிக்கும் (சுய படைப்பாற்றல்) சில மூளை சம்பந்தப்பட்ட மனநோய்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்களாம் சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள்.

அதாவது அதிகம் கதை.. நாவல்.. கவிதை என்று கற்பனையில் புனைவுலகில் அதிகம் வாழ்க்கை நடத்துவோர் மத்தியில் இந்த மனநோய்கள் ஏற்படுவதற்கான அல்லது காணப்படுவதற்கான வாய்ப்பு (risk) அதிகம் என்று அறியப்பட்டுள்ளது.

அதேபோல் இவர்கள் மத்தியில் தற்கொலைக்கான வாய்ப்பு சாதாரணமானவர்களைக் காட்டிலும் இரு மடங்காக உள்ளதாம்.

அதேபோல்.. அதிகம் நடனம் ஆடுவோர்.. படப்பிடிப்பு கலைஞர்கள் இவர்களிடமும் இந்த நிலை காணப்படுகிறதாம்.

அதற்காக கிரியேற்றிவிற்றி வகுப்புக்குள் அடங்கும் எல்லோருக்கும் மனநோய் வரும் என்பது அர்த்தமல்ல. அவர்கள் மத்தியில் மனநோய்க்கான வாய்ப்புத் தான் அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்..!

கவிஞர் கண்ணதாசனும் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். பாரதியாரும் ஒரு போக்கு என்று சொல்கிறார்கள்..!

அப்ப பார்க்கப் போனால்.. அழகை ரசிப்பதும்.. ஒன்றில் ஆழமாக ஈடுபாடு காட்டுவதும் மனநோய்க்கு வழிவகுக்கும் என்று நாளை அறிவித்தால் ஆச்சரியப்படத் தேவையில்லைப் போலும்..!

Creativity 'closely entwined with mental illness'

Posted Image

Novelist Virginia Woolf killed herself

Creativity is often part of a mental illness, with writers particularly susceptible, according to a study of more than a million people.

Writers had a higher risk of anxiety and bipolar disorders, schizophrenia, unipolar depression, and substance abuse, the Swedish researchers at the Karolinska Institute found.

They were almost twice as likely as the general population to kill themselves.

The dancers and photographers were also more likely to have bipolar disorder.

As a group, those in the creative professions were no more likely to suffer from psychiatric disorders than other people.

But they were more likely to have a close relative with a disorder, including anorexia and, to some extent, autism, the Journal of Psychiatric Research reports.

வெள்ளி, 17 ஜனவரி, 2014

நட்புக்குத் துரோகம் !                                                                               உபயம்  தமிழ் சிறுகதை
சிறுகதை   

ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.

நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.

ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை இருக்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், அந்தப் பக்கமாக சென்ற சிங்கத்தைக் கண்டு நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.

ஒரு வழி நரிக்குப் புலப்பட்டது. அதாவது, தன் நண்பன் கழுதையைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தான் தப்பித்துக் கொள்வது என்பதுதான் அந்த வழி.

நரி உடனே சிங்கத்தை நோக்கி, ""மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!'' என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.

நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.

""நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

நரி பதறிப் போய், ""மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

""நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே,

உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது,'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.

இதற்குத்தான் கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.

புதன், 15 ஜனவரி, 2014

                               உலகமும்  இந்தியாவும் 

1. ஞான முத்திரை : அறிவு முத்திரை


முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். 

நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம். 
பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.
ஆகவே இந்த முத்திரை,
• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.
• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.
• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

                     பொங்கல் வாழ்த்துகள் 

தேனினும்  இனிய செங்கரும்பாய் 
      திகட்டாத வெள்ளம்முமாய் 
வானத்து செங்கதிரை வாஞ்சையுடன் 
      வணங்கி நித்தமும் பார்த்தாலும் 
நினைபதட்கு ஒருநாளாய்  முன்னோர் 
      வகுத்த திருநாள்தான் தை திருநாள் 
முற்றத்தில்  மூவரையும் உள்ளத்தில் 
   ஏற்றி இலத்தில் அழைத்து 
உற்றாரும் உறவினரும் ஒன்றி 
   பால் பழம் வெள்ளம் தேன் கலந்த 
  பொங்கல் படைத்தது கொண்டாடும் 
       உள்ளத்தில் இனிக்கட்டும்