புதன், 27 ஆகஸ்ட், 2014

நவக்கிரகங்களும் உயிர்கள் வளர்ச்சியும்;ஜோதிடம்


சூரியன் சந்திரன் இல்லாவிட்டால் உலகில் மனித வர்க்கமே தோன்றி இருக்காது..மற்ற எந்த ஜீவராசிகளும்,தாவரங்களும் தோன்றி இருக்கவும் நியாயமில்லை.சூரிய
சந்திரனால் எல்லாம் உயிர் பெற்று வளர்கின்றன..வாழ்கின்றன..இவ்விரண்டு கோள்கள் போல மற்ற கிரகங்களும் தனக்கென தனித்தன்மை பெற்றிருக்கின்றன...இக்கோள்களின் மொத்த ஒளிக்கதிர்கள் ஒன்றாக சேர்ந்து பூமியில் விழும்போது மனிதனின் குணங்களில் ,ஜீவராசிகளின் குணங்களில் வாழ்க்கை முறையில் நிறைய மாறுதல்கள் உண்டாகின்றன...மனிதன் வாழ பலவித தேவைகள் பூர்த்தியாகின்றன...

பூமிக்கு ஆக்ர்ஷ்ண சக்தி இருப்பதால் சுமார் இரண்டு கிலோ மீட்டர்களுக்குண்டான எதையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும்.இந்த சக்தி மற்ற எந்த கோளுக்கும் இல்லை..இதனால்தான் பூமியை தவிர எங்கும் ஜீவராசிகள் வாழ வாய்ப்பில்லை என அக்கால நம் முனிவர்களும் ,சித்தர்களும் சொல்லிவிட்டு சென்றனர்.இக்கால விஞ்ஞானிகளும் அது உண்மை என ஒப்புக்கொள்கின்றனர்.

 மனித உடல் வளர்ச்சியில் தலை முதல் மார்பு வரையிலுள்ள மேல் பகுதியை கிரக மண்டலத்தின் இளவரசனான சூரியன் வளர்க்கிறான் என்கிறது ஜோதிடம்.அதுபோலவே சந்திரன் முகத்தையும் ,செவ்வய் மார்பையும் ,புதன் இடையையும் முதுகையும்,வயிற்றை குருவும்,கைகளை ராகுவும் கால்களை கேதுவும் வளர்க்கின்றனர் என ஜோதிடம் சொல்கிறது.ஜாதகத்தில் எந்த கிரகம் வலு குன்றி இருக்கிறதோ அதர்குறிய உடல் பாகங்கள் அழகில்லாமலோ ,வளர்ச்சி இல்லாமலோ,பாதிக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது!!

புதன், 6 ஆகஸ்ட், 2014

                         வல்லரசை நோக்கி இந்தியா

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.  இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

74.3 சதவீதம்

அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர்.  இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இது 3 மடங்கு அதிகமாகும்.  அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனநல பாதிப்பு
இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.  இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர்.  அவர்களிடம், மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன.  இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது.  அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.

இளம் வயதில் குடிக்க தொடங்குவதால் வாழ்நாளில் அது தொடர்பான காயங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இந்த முடிவுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வு குறித்து அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான கலாசாரம்
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது.  குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மதுபான நுகர்வு ம்ற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது.  மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் தெரியுமா?






ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்றவற்றிற்கு நல்லது மற்றும் கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் ருத்ராட்சம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் மகத்துவம்:

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும்.

ஒரு முக ருத்ராட்சத்தின் மகத்துவம்:


ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.

மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும், கோபத்தீயும் விலகும்.

எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.

பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும், பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.